Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Sri Kailasanathar Temple,Mathavaram,Chennai

| அருள்மிகு ஶ்ரீ கற்பகாம்பாள் அம்மன் உடனுறை அருள்மிகு கைலாசநாதர் கோயில் திருக்கோவில், மாதவரம்,சென்னை


Arulmigu Shri Kailasanathar Temple,Mathavaram,Chennai



இறைவர் : அருள்மிகு ஶ்ரீ கைலாசநாதர்  

இறைவி :ஶ்ரீ கற்பகாம்பாள்

தல மரம் : மாமரம்

தீர்த்தம் :

ChennaiDistrict_ KailasanatharTemple_Madhavaram_shivanTemple


அருள்மிகு ஶ்ரீ கற்பகாம்பாள் அம்மன் உடனுறை அருள்மிகு கைலாசநாதர் கோயில் திருக்கோவில், மாதவரம்,சென்னை , தல வரலாறு.

1300 வருட பழமையான இக் கோயில் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் நிர்மானிக்கப்பட்டு பின் மிகவும் சிதிலடைந்து 1974ம் வருடம் காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரசுவாமிகள் முயற்சியில் புனரமைக்கப்பட்டுள்ளது.

மூலவர் மரகதக் கல்லால் ஆனது. பால் அபிஷேகம் லிங்கத்தின் மேல் செய்யும் போது அதிலிருந்து கிளம்பும் ஒளிக்கிரணங்களை நணுக்கமாக பார்த்தால் ஜோதி வடிவத்தில் தரிசிக்கலாம். அபூர்வமான இக்காட்சியை காண்பவர்கள் பாக்கியசாலிகள். நாலரை அடி உயரமும் பதினாறேகால் அடி சுற்றளவும் உள்ள லிங்கத்தின்மீது சித்திரைமாதம் 1ம் தேதி முதல் 5ம் தேதிவரை சூரியனின் கதிர்கள் மூலவர் மீது படும் வகையில் அமைந்துள்ளது சிறப்பு.

அருள்மிகு ஶ்ரீ கற்பகாம்பாள் தனிச்சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு காசி விஸ்வநாதர், மற்றும் 12 ஜோதிர்லிங்கங்கள் தனித்தனியாக அருள்பாலிக்கிறார்கள். சரபேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஐயப்பன், ஆஞ்சநேயர் சன்னிதிகளும் உள்ளன கயிலையம்பதி, தம் மனைவியுடன் தவம்புரிந்த இந்த திருத்தலத்தில் சிவனை வழிபடும் தம்பதியருக்கு புத்திர பாக்கியம் விரைந்து கிடைக்கும். பேச்சு இழந்த குழந்தைகளுக்கு பேசும் திறன் வாய்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
சென்னை மாதவரம்

சென்னை மாவட்டம்



திருக்கோயில் திறக்கும் நேரம்:



அமைவிடம்:

இத்தலம் சென்னை மாதவரம் பேரூந்து நிலையத்திற்கு அருகில் இக் கோயில் அமைந்துள்ளது. பேருந்து வசதி அடிக்கடி உள்ளது.